ஊர் திருவிழாவின் போது வெத்தலை பிடிப்பதை பார்பதற்காகவே கூட்டம் கூடும்.
மிகவும் சந்தோஷமான தருணங்கள் அது.
ஊரில் உள்ள அனைத்து ஆண்களும் அன்று அங்கே இருப்பார்கள்.
ஊர் திருவிழாவின் போது பூசொரிதல் என்ற ஒரு முக்கியமான நிகழ்ச்சி உண்டு. சித்திரை மாதம் இரண்டு நாட்கள் திருவிழா நடக்கும். திருவிழாவிற்கு முன்பு ஊரில் உள்ள அனைவரிடமும் வீட்டுக்கு இருபது ரூபாய் வீதம் வசூலிப்பார்கள். அது எதற்கு என்றால் கீழே உள்ளதை படிக்கவும்.
முதல் நாள் திருவிழா :
முதல் நாள் திருவிழாவில் காலை நேரத்தில் திருவிழாவிற்கு முன்பு வசூலித்த இருபது ரூபாய்க்கு பூக்கள் கொடுப்பார்கள் அதை வீட்டுக்கு ஒருவர் வந்து வாங்கி செல்வார்கள். அன்று மாலை ஊரில் உள்ள அனைத்து பெண்களும் தட்டில் வைத்து கோவிலுக்கு கொன்று வருவார்கள்.அன்று ஊரில் உள்ள அனைத்து பெண்களும் ஒவ்வெரு பகுதியாக பிரிந்து அவர்களுக்கு பின்னால் அந்த பகுதி பெரியவர்களும் மற்றும் சிறியவர்களும் வருவர். அதை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அன்று அந்த பூக்களை அம்மன் சன்னதியில் கொன்று வந்து வைப்பார்கள். அன்று மங்கள சுந்தரி அம்மனை தரிசிப்பது மிகவும் அழகாக இருக்கும்.
ஊரில் உள்ள அனைவரும் வந்த பிறகு பொதுமக்கள் அவர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வாழை பழங்களை மேல தூக்கி எறிவார்கள். அதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுப்பர். அவைகள் முடிந்த பிறகு அன்று இரவு எப்பவும் வள்ளி திருமண நாடகம் நடைபெரும்.இது தான் முதல் நாள் திருவிழா.
இரண்டாவது நாள் திருவிழா :
இரண்டாவது நாள் திருவிழாவின் போது மிக சிறப்பாக இருக்கும். மாலை மூன்று மணி அளவில் ஊரில் உள்ள அனைத்துப் பெண்களும் நான்கு மணிக்குள் கோவிலுக்கு வந்து விடுவார்கள். பின்பு, அனைவரும் அவங்க கொண்டு வந்திருக்கிற தட்டில் பூக்களை எடுத்து மலம்பிரியான் என்ற குலத்திற்கு கொண்டு செல்வர். அவர்கள் அனைவரும் வரிசையாக சேர்ந்து செல்வர். அன்று ஆண்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும், ஆம் ஊரில் உள்ள அனைத்து பெண்களையும் பார்க்க முடியும் என்பதால். அன்று இரவு இளைநர்கள் சார்பாக அல்லது ஊரில் உள்ள பெரிவர்கள் சார்பாக ஒரு நல்ல கச்சேரி நடைபெரும்.இது இரண்டாவது நாள் திருவிழா.
அதைப் போல எங்கள் ஊரின் திருவிழாவின் போது கச்சேரிகள் நடப்பது உண்டு. அன்று அந்த கச்சேரியில் எந்த அத்துமீறல்களும் மற்றும் எந்த ஆபாசமும் இருக்காது. அதைப் போல ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாகத்தான் அமர வேண்டும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கும் பழக்கம் உண்டு.