Saturday, January 31, 2009

தனியாமங்கலம் பெயர்காரணம்


பல வருடங்களுக்கு முன்பு ஒரு ஊரணியில் ஒரு அம்மன் சிலையை கண்டு எடுத்தார்களாம். அப்போது தனியாமங்கலத்தில் நல்ல விளைச்சல்... ஊரில் எப்பவும் கரும்பு, வாழை மற்றும் நெல் நன்கு விளையும்.அந்த சமயத்தில் இந்த சிலை கிடைத்ததால் ஊர் பெரியவர்கள் மங்கள சுந்தரி அம்மன் என்று பெயர் வைத்தார்களாம். அப்பதான் எங்கள் ஊருக்கு தனியாமங்கலம் என்ற பெயரும் வந்ததாக ஊர் பெரியவர்கள் சொல்லியதுண்டு.
சித்திரை மாதம் வந்தால் தனியாமங்கலத்தில் திருவிழா களை கட்டிவிடும்..அப்பொழுது அனைவரும் சந்தோசமாக இருப்போம்.

கட்டுப்பாட்டுக்கு பெயர் பெற்றது எங்கள் ஊர். ஆம், எங்கள் சரக காவல் நிலையம் கீழவளவில் உள்ளது. இங்கே எங்கள் ஊரை பற்றி கல்வி கூடமாக அறிவித்து இருக்கிறார்கள். ஆம் எங்கள் ஊரை தவிர மற்ற ஊருகளுக்கு எப்பொழுதும் சென்று வருவார்கள் . ஆனால் தனியாமங்கலத்திற்கு மட்டும் வர மாட்டார்கள்.ஆம் அவ்வளவு கட்டுகோப்பான ஊர்.

தனியாமங்கலம் ஒரு கிராமம்தான் என்றாலும் மிகப் பெரியது. மூன்று கிராமங்கள் சேர்ந்த ஊர் இது (த.தேத்தாம்பட்டி, த. சாத்தமங்கலம், த, பெருமாள்பட்டி). எட்டு ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கிறார்கள். ஊரை சுற்றி பெரியார் ஆற்றுகால் பாசன வசதி உண்டு.

தனியாமங்கலம் சிறப்புகள்

மங்கள சுந்தரி அம்மன் கோவில், சித்திரை மாத திருவிழா, விவசாயம் - நெல்,கரும்பு , வாழை., பிள்ளையார் கோவில், அய்யனார் கோவில், அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா, அடைக்கலம் காத்த அம்மன் கோவில் மற்றும் திருவிழா, பெருமாள் கோவில் திருவிழா

திருவிழாவின் சிறப்புக்கள்


ஊர் திருவிழாவின் போது வெத்தலை பிடிப்பதை பார்பதற்காகவே கூட்டம் கூடும். மிகவும் சந்தோஷமான தருணங்கள் அது. ஊரில் உள்ள அனைத்து ஆண்களும் அன்று அங்கே இருப்பார்கள்.

ஊர் திருவிழாவின் போது பூசொரிதல் என்ற ஒரு முக்கியமான நிகழ்ச்சி உண்டு. சித்திரை மாதம் இரண்டு நாட்கள் திருவிழா நடக்கும். திருவிழாவிற்கு முன்பு ஊரில் உள்ள அனைவரிடமும் வீட்டுக்கு இருபது ரூபாய் வீதம் வசூலிப்பார்கள். அது எதற்கு என்றால் கீழே உள்ளதை படிக்கவும்.

முதல் நாள் திருவிழா :

முதல் நாள் திருவிழாவில் காலை நேரத்தில் திருவிழாவிற்கு முன்பு வசூலித்த இருபது ரூபாய்க்கு பூக்கள் கொடுப்பார்கள் அதை வீட்டுக்கு ஒருவர் வந்து வாங்கி செல்வார்கள். அன்று மாலை ஊரில் உள்ள அனைத்து பெண்களும் தட்டில் வைத்து கோவிலுக்கு கொன்று வருவார்கள்.அன்று ஊரில் உள்ள அனைத்து பெண்களும் ஒவ்வெரு பகுதியாக பிரிந்து அவர்களுக்கு பின்னால் அந்த பகுதி பெரியவர்களும் மற்றும் சிறியவர்களும் வருவர். அதை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அன்று அந்த பூக்களை அம்மன் சன்னதியில் கொன்று வந்து வைப்பார்கள். அன்று மங்கள சுந்தரி அம்மனை தரிசிப்பது மிகவும் அழகாக இருக்கும்.

ஊரில் உள்ள அனைவரும் வந்த பிறகு பொதுமக்கள் அவர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வாழை பழங்களை மேல தூக்கி எறிவார்கள். அதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுப்பர். அவைகள் முடிந்த பிறகு அன்று இரவு எப்பவும் வள்ளி திருமண நாடகம் நடைபெரும்.இது தான் முதல் நாள் திருவிழா.

இரண்டாவது நாள் திருவிழா :

இரண்டாவது நாள் திருவிழாவின் போது மிக சிறப்பாக இருக்கும். மாலை மூன்று மணி அளவில் ஊரில் உள்ள அனைத்துப் பெண்களும் நான்கு மணிக்குள் கோவிலுக்கு வந்து விடுவார்கள். பின்பு, அனைவரும் அவங்க கொண்டு வந்திருக்கிற தட்டில் பூக்களை எடுத்து மலம்பிரியான் என்ற குலத்திற்கு கொண்டு செல்வர். அவர்கள் அனைவரும் வரிசையாக சேர்ந்து செல்வர். அன்று ஆண்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும், ஆம் ஊரில் உள்ள அனைத்து பெண்களையும் பார்க்க முடியும் என்பதால். அன்று இரவு இளைநர்கள் சார்பாக அல்லது ஊரில் உள்ள பெரிவர்கள் சார்பாக ஒரு நல்ல கச்சேரி நடைபெரும்.இது இரண்டாவது நாள் திருவிழா.

அதைப் போல எங்கள் ஊரின் திருவிழாவின் போது கச்சேரிகள் நடப்பது உண்டு. அன்று அந்த கச்சேரியில் எந்த அத்துமீறல்களும் மற்றும் எந்த ஆபாசமும் இருக்காது. அதைப் போல ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாகத்தான் அமர வேண்டும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கும் பழக்கம் உண்டு.

தனியாமங்கலம் பற்றிய குறிப்பு

மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டத்தில் உள்ளது தனியாமங்கலம் என்ற அழகிய கிராமம் இது . மேலூர்'இல் இருந்து ஒரு நாளைக்கு எட்டு அல்லது பத்து பேருந்துகள் தனியாமங்கலம் வழியாக சருகுவலையபட்டி'கும் மட்டும் உறங்கான்பட்டிக்கும் சென்று வரும். தனியாமங்கலத்தில் மூன்று முக்கிய பஸ் நிறுத்தங்கள் உண்டு. முதலாவது , பங்களா ஸ்டாப் - எங்கள் ஊரின் ஆரம்பம் இது. இரண்டாவது ஸ்டாப் : காங்கிரஸ் மாளிகை ஸ்டாப் ..இது எங்கள் ஊரின் இதயம் என்று சொல்லலாம். அடுத்து மூன்றாவது ஸ்டாப் : தியேட்டர் ஸ்டாப் அல்லது சுந்தரி அம்மன் கோவில் ஸ்டாப்..இது தனியாமங்கலத்தில் சிறப்பு என்று சொல்லலாம். வருடம் ஒருமுறை இளைகர்கள் சார்பாக கபடி போட்டி மற்றும் கிரிக்கெட் போட்டி நடக்கும்.மேலூரில் இருந்து வருவதற்கு பஸ் நம்பர் - 4B,4C,prp.

பள்ளி வயது நினைவலைகள்

நாங்கள் ஒண்ணாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசினர் பள்ளியில் தான் படித்தோம். எங்களுக்கு மொத்தமாக ஐந்து அல்லது ஆறு ஆசிரியர்கள் தான் இருப்பார்கள். எங்கள் தலைமை ஆசிரியர் ஒரு பைக்'ல தான் வருவார்..அந்த பைக் சத்தம் கேட்டால் எல்லாரும் அவங்க அவங்க கிளாஸ்'ல அமைதியா போயி உட்கர்ந்துகுவோம்.
அப்படி இல்லை என்றால் ஒரே விளையாட்டு தான்.
ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது.
நாங்கள் விளையாடாத விளையாட்டுகளே கிடையாது.

அரசினர் உயர் நிலை பள்ளி- மேல் நிலைப் பள்ளியானது எப்படி?

எங்கள் அரசினர் உயர் நிலைப் பள்ளி இந்த ஆண்டு முதல் மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்த பட்டு இருக்கிறது. இதற்காக முயற்சியில் ஈடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் ஊர் பெரியவர்களுக்கும் இந்த சமயத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆம், இதற்காக எங்கள் பள்ளி மாணவ மற்றும் மாணவிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

ஆம், படிப்பில் மட்டும் இல்லாமல் விளையாட்டிலும் எங்கள் பள்ளி சிறப்பான இடமே பெற்று இருக்கிறது. ஆம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தமிழரசு என்ற மாணவன் மாநில அளவில் தடகள போட்டியில் பங்கேற்று சிறப்பான இடத்தை பெற்றார்